டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள நெத்திமேடு பொடாரன்காடு பகுதியில் கோபால் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இதில் கோபால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கோபால் அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது தகராறு முற்றி கோபால் மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் கோபால் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபாலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.