வீட்டில் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விடிவெள்ளி நகர் பகுதியில் அசோக்குமார்- மவுனிகா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு சபரி என்ற மகன் இருக்கின்றான். இதில் அசோக்குமார் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு விட்டு வருகின்றார். இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு மவுனிகா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவார். அதன்பின் அசோக்குமார் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சென்று சமாதானம் பேசி மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக மவுனிகா கொடுத்த புகாரின்படி கணவன்- மனைவியை இருவரையும் பொம்மிடி காவல்துறையினர் அழைத்து சமரசம் செய்து அனுப்பிள்ளனர்.
இந்நிலையில் வீட்டிற்கு வந்த மவுனிகா இரவு திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மவுனிகாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மவுனிகாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மவுனிகாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.