உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகாக ,இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி இன்னும் சில தினங்களில் பயிற்சியை மேற்கொள்ள உள்ளது .
உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இங்கிலாந்து சவுதாம்ப்டன் மைதானத்தில் வருகிற 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 20 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்திற்கு சென்றுள்ளது. இதில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்று 400 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். அதோடு டெஸ்ட் தொடரில் இவர் , தவிர்க்க முடியாத உயரத்திற்கு சென்றடைவார் ,என பல வீரர்களும் , கிரிக்கெட் ஜாம்பவான்களும் அஸ்வினை புகழ்ந்துள்ளனர் .இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ,இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அஸ்வினை ‘ஆல் டைம் பெஸ்ட்’ என்று மற்றவர்கள் கூறுவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
நியூசிலாந்து ,தென்னாப்பிரிக்கா ,ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் அஸ்வின் ஒருமுறை கூட 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது இல்லை. இதனால் அவரை எப்படி எல்லாக்காலத்திலும் சிறந்த வீரராக என்னால் கருத முடியாது என்று அவர் தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அஸ்வின் தன்னைக் குறித்து கருத்து தெரிவித்த மஞ்ச்ரேக்கருக்கு , மீம்ஸ் முலமாக நக்கலாக பதிலடி கொடுத்துள்ளார். அதில் அந்நியன் படத்தில் விக்ரம், விவேக்கிடம் சொல்லும் வசனத்தை வைத்து மஞ்ச்ரேக்கருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இவரது பதிலடி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
😂😂😂🤩🤩 https://t.co/PFJavMfdIE pic.twitter.com/RbWnO9wYti
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) June 7, 2021