அணைப்பகுதியில் உலாவரும் மான்களை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் பகுதியில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. கடந்த 25 வருடங்களுக்கு பிறகு அந்த அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த வட்டமலை கரை ஓடை அணைப் பகுதியில் ஏராளமான பறவைகள், மான்கள் போன்ற விலங்கினங்கள் உள்ளன.
தற்போது அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பறவைகள் மற்றும் மான்கள் போன்ற விலங்கினங்கள் நீர்ப்பிடிப்பு பகுதியை விட்டு வறண்ட பகுதிக்கு வந்து சுற்றி திரிகின்றன. இதனால் சமூக விரோதிகள் மான் மற்றும் பறவைகள் போன்றவற்றை வேட்டையாட வாய்ப்புள்ளது. ஆகையால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் அவற்றை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.