செங்கல் சூளை உரிமையாளரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதியினருக்கு பிரியங்கா என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் இருக்கின்றனர். இவருக்கு சொந்தமான செங்கல்சூளை கட்டுக்கரை பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் ராஜேந்திரனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் துரைசாமி என்பவரின் மகனான சந்தோஷிற்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து சந்தோஷுக்கு தன்னை ஏமாற்றியதாக ராஜேந்திரன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் செங்கல் சூளையில் ராஜேந்திரன் ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக சந்தோஷ் ராஜேந்திரனை வெட்டிக் கொலை செய்தது வந்துள்ளது. எனவே தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான சந்தோசை காவல்துறையினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.