திரையரங்குகளில் கூட்டங்கள் அதிகரிக்க பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா என்ற தொற்று பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்பு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் தொற்றின் பாதிப்பு சற்று குறையத் தொடங்கியது. ஆகையால் ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள், பொது வெளிகள், சற்று கட்டுப்பாடுகளும் திறக்கப்பட்டது. இருப்பினும் திரையரங்குகளில் முன்பிருந்த கூட்டத்தைப் போல தற்போது இல்லை.
இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஆகையால், ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வர வைக்க வேண்டும் என்று பழைய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, பில்லா ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் கடந்த 2004ஆம் ஆண்டு சிம்பு,ஜோதிகா நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்படமும் வெளியாக உள்ளது. இரட்டை வேடத்தில் மன்மதன் படத்தில் நடித்து அசத்திய சிம்புவின் படம் டிஜிட்டல் முறையில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால் திரையரங்குகளில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.