Categories
பல்சுவை

மண்ணை உண்டு உயிர் வாழ முடியுமா….? வறுமையின் கோரதாண்டவம்…. அவதியில் மக்கள்….!!

நாம் அனைவரும் நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போது “சாப்பாடு மண்ணு மாதிரி இருக்கு” என்கிற வார்த்தையை ஒரு முறையாவது உபயோகித்து இருப்போம். ஆனால் ஒரு நாட்டில் உணவே இல்லாமல் மண்ணையும் களிமண்ணையும் உண்டு வாழ்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? ஹைய்டி நாட்டில் ஹைய்டியன்ஸ் என்ற மக்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு கிடைக்காததால் களிமண்ணில் சக்கரையை தடவி சாப்பிடுகிறார்களாம்.

இதை சாப்பிடுவதால் அவர்கள் உடம்பிற்கு எந்தவித சத்துக்களும் புரதங்களும் கிடைக்கவில்லை. மேலும் அங்கு இருக்கும் குழந்தைகளின் பசியை போக்க களிமண்ணில் பிஸ்கட் போன்று செய்து அதனை காயவைத்து பின் சாப்பிட கொடுப்பார்களாம். அவர்களால் இந்த களிமண்ணை முழுவதுமாக சாப்பிட முடியாது. ஆனால் பசி தெரிய கூடாது என்பதற்காக இதேபோல் செய்கிறார்களாம். உலகில் சாப்பாட்டுக்கு பஞ்சமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் 2021ல் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி 100 கோடி மெட்ரிக் டன் உணவை வீணாக்கி இருக்கிறோம்.

இது கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி கிலோ கிராம் அளவிற்கும் அதிகம். இந்த வீணான சாப்பாட்டை சேர்த்து வைத்தால் ஒரு பெரிய மழையின் அளவை விட பெரியதாக இருக்கும். ஆனால் அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு ஒரு கைப்பிடி அளவு உணவு கூட கிடைக்காமல் வெறும் களிமண்ணை  உண்டு வாழ்கிறார்கள். அந்த வீணான சாப்பாட்டில் இருந்து வெறும் 1% உணவு இவர்களுக்கு கிடைத்திருந்தால் அங்கே இருக்கும் யாரும் பசியோடு இருந்திருக்க மாட்டார்கள்.

Categories

Tech |