மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ,2 வது சுற்றிக்கு நோவக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார் .
மொனாக்கோவில் மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ,2வது சுற்று போட்டியில் செர்பியா நாட்டை சேர்ந்த நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்த ஜானிக் ஜின்னெரை ஆகியோர் மோதிக்கொண்டனர். இதில் ஜோகோவிச் 6-4, 6-2 என்ற என்ற நேர் செட் கணக்கில், 22வது இடத்திலுள்ள ஜானிக் ஜின்னெரை தோற்கடித்தார்.
எனவே நோவக் ஜோகோவிச் ஜின்னெரை தோற்கடித்து , 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் நடைபெற்ற போட்டியில் நோவாக் ஜோகோவிச் தொடர்ந்து ,10வது முறையாக வெற்றி பெற்று உள்ளார். இதைத் தொடர்ந்து மற்றொரு போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீரரான ரபெல் நடால்,அர்ஜென்டினா பெட்ரிகோ டெல்போனிஸ்சையுடன் மோதியதில் ,6-1, 6-2 என்ற நேர்செட்டில் கணக்கில் வெற்றி பெற்று 3 வது சுற்றிக்கு முன்னேறினார் .