மராட்டிய மாநில உயர் கல்வித்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் சென்ற சில நாட்களுக்கு முன் அம்பேத்கர் பற்றி சர்ச்சை கருத்தை தெரிவித்து இருந்தார். இதனால் அவரது பேச்சுக்கு மாநிலத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மீது புனே மாவட்டம் பிம்பிரி பகுதியில் கருப்பு மை வீசப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் மந்திரியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 காவல்துறையினரை புனே போலீஸ் கமிஷனர் அங்குஷ் ஷிண்டே பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது குறித்து போலீஸ் கமிஷனர் அங்குஷ் ஷிண்டே கூறியதாவது “மந்திரி மீது கருப்பு மை வீசப்பட்ட சம்பவத்தில் 3 அதிகாரிகள் உட்பட 10 காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். அவர்கள் அனைவரும் மந்திரி வருகையின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள்” என்று கூறினார்.