Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

யாருமே வாங்கல…. மாற்றுத்திறனாளிகள் போராட்டம்…. அலுவலரின் பேச்சுவார்த்தை….!!

மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுவை வாங்க மறுத்ததால் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குறுவட்டம் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பறிக்கும் வண்ணம் வெளியிடப்பட்ட அரசாணையை கண்டித்தும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உடல் குறைபாடு தன்மைக்கேற்ப வேலை ஒதுக்கப்பட வேண்டும் எனவும், முழுமையான 100 நாள் வேலை கொடுக்காமலும் இருக்கின்ற நிலையை கண்டித்தும், பின் 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையான வேலைகளை வழங்க வேண்டும். இதில் 4 மணி நேரப் பணியும் தினக்கூலியாக 273 ரூபாய் குறைக்காமல் வழங்கப்பட வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலை அட்டை வழங்கப்பட வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் உதவி தொகை வழங்கிட வேண்டும் என அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டுமனை, வேலைவாய்ப்பு மற்றும் வீடு உள்ளிட்ட அனைத்து சமூக நல திட்டத்திலும் 5% மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டுமென பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் கோரிக்கைகளை விளக்கி மாவட்ட அமைப்பாளரான ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். அப்போது மனு கொடுப்பதற்கு உள்ளே சென்ற நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும் மற்ற அலுவலர்களும் மனுக்களை வாங்க முன்வராத காரணத்தினால் கோபமடைந்த மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வராண்டாவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அலுவலர் சேகர் வந்து அவர்களிடம் இருந்த மனுக்களை பெற்றுக் கொண்டதோடு கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இதன் காரணத்தினால் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |