திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் முதல்வர் பெண்ணிடம் மனு வாங்கி குறைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் தெருவில் நடுத்தர ஏழை குடும்பத்தைச் சேர்ந்த வெங்கடலட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக தற்காலிக கணினி இயக்குபவராக வேலை பார்த்து வருகின்றார். எனவே வெங்கடலட்சுமி தன்னை பணி நிரந்தரம் செய்ய வேண்டி பலமுறை பேரூராட்சிகள் இயக்குனர் அலுவலகத்திலும், உள்ளாட்சி துறை நிர்வாகத்திற்கும் மனு அனுப்பியிருந்தார். ஆனால் வெங்கடலட்சுமி இதுவரையிலும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
இதனையடுத்து மாமல்லபுரத்தில் நடக்கும் ஒரு திருமண சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது வெங்கடலட்சுமி அங்கு சாலையோரத்தில் கையில் மனுவுடன் நிற்பதை கண்டு முதல்வர் முக. ஸ்டாலின் தனது காரை நிறுத்தி பெண்ணிடமிருந்து மனுவை பெற்றுக்கொண்டு அவரிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின் திரு. முக ஸ்டாலின் இந்த மனு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து கண்டிப்பாக ஆவண செய்வதாக வெங்கட லட்சுமியிடம் உறுதியளித்துள்ளார்.