Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல” கிராம மக்களின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள புதுகொத்தாம்பாடி கிராமத்தில் பெரும்பாலான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சிற்றாற்றை கடந்துதான் பொதுமக்கள் செல்ல வேண்டியது இருக்கிறது. ஆனால் அந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பெத்தநாயக்கன்பாளையம் அருகிலுள்ள பனை ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதனையடுத்து புதுகொத்தாம்பாடி வழியாக வரும் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரவேண்டி மக்கள் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். இதுகுறித்து கிராமமக்கள் கூறியபோது “புதுகொத்தாம்பாடியில் ஓடும் ஆற்றில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக ஆற்றை கடந்து செல்வதற்கு எங்களுக்கு பயமாக இருக்கிறது. இங்கு பாலம் அமைக்க கோரி பலமுறை நாங்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று அவர்கள் கூறினார்கள். இதனைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |