ஆர்கே நகர் தொகுதி தேர்தல் ரத்து காரணமாக ஏற்பட்ட செலவுத் தொகையை இழப்பீடாக வழங்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது
தேர்தல் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் பணம் பட்டுவாடா தொடர்பாக அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தார் திமுக வேட்பாளர் மருது கணேஷ்.
ஆர்கே நகர் தேர்தல் ரத்து காரணமாக ஏற்பட்ட செலவுத் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தார். அந்தக் கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்டு இருக்கிறது உயர்நீதிமன்றத்தால்.