மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒன்றிய பாசிச சங்பரிவார கும்பலால் ஆர்எஸ்எஸ் கும்பல்களால் தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்று இருக்கின்ற தமிழக ஆளுநர் அவர்கள், பொறுப்பேற்ற காலத்திலிருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், சட்டத்திற்கு மதிப்பளிக்காமலும், தொடர்ந்து தான்தோன்றித்தனமாக தன்னுடைய அதிகாரத்தை செலுத்தி வருகிறார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு,
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள், இவர்களால் தமிழகத்தில் நிறைவேற்றப்படுகின்றன எந்த ஒரு சட்டத்தையும் அனுமதித்து, கையொப்பமிட்டு, அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டிய வேலை செய்ய வேண்டிய கவர்னர், இன்றைக்கு ஒன்றிய அரசின் தலைமை அமைச்சகமும், உள்துறை அமைச்சகம் என்ன சொல்கிறதோ… அதை மட்டும் தான் நாங்கள் செய்வோம். எங்களுக்கு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் வகுத்தளிக்கப்பட்டு இருக்கின்ற, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் நாங்கள் இங்கு பணி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
எங்கள் சட்டம் மனுதர்ம சட்டம், எங்கள் சட்டம் பூணூல் சட்டம், எங்கள் சட்டம் மனு ஸ்ருமிதி சட்டம் என்பதன் அடிப்படையில், அரசியல் சட்டத்தையே காலில் போட்டு மிதித்து, அகம்பாவத்துடனும், அதிகார திமிருடனும், ஆணவத்துடனும் இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய ஆளுநராக பணி செய்து கொண்டிருக்கிறார்.அந்த அதிகார திமிர் பிடித்த ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மனிதநேய மக்கள் கட்சி இங்கு முன்வைத்திருக்கிறது என தெரிவித்தார்.