Categories
அரசியல் மாநில செய்திகள்

”அடாவடி ஆட்சி” யாராக இருந்தாலும் கவலையில்லை… C.M ஸ்டாலினுக்கு சொல்ல வேண்டாம்…! வேல்முருகன் காட்டமான விமர்சனம் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எந்த நேரத்திலும்,  எவரை வேண்டுமானாலும் கைது செய்வோம், அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் என்று சொன்னால் நாங்கள் எவரிடத்திலும் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை,  மாநில சுயாட்சிக்காக  இயக்கம் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழக அரசின் அனுமதி அவசியம் இல்லை.

தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு தகவல் என்கின்ற அடிப்படையில் கூட அவருக்கு நாங்கள் தகவல் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எங்களை எதிர்க்கின்ற, எங்களுடைய சங்கீ தனத்தை தோலுரித்துக் காட்டுகிற, சமதர்ம சமுதாயத்திற்காக போராடுகிற, சமூக நீதிக்காக போராடுகின்ற,  சமத்துவத்துக்காக போராடுகிற, எந்த ஒரு இஸ்லாமிய சகோதரனையும் நாங்கள் எங்கள் இடத்தில் இருக்கின்ற அதிகாரம் பொருந்திய NIA என்கின்ற ஒன்றிய அரசின் புலனாய்வை கொண்டு நாங்கள் தூக்கி செல்வோம்.

கர்ப்பிணி தாயுக்கு கணவனாக இருந்தாலும், குழந்தைக்கு தகப்பனாக இருந்தாலும், வயது முதிர்ந்தவர் நிலையில் இருந்தாலும், எங்களுக்கு கவலை இல்லை. அவர் பாசிச சங்பரிவார கும்பல்களின் அடாவடியையும், அட்டூழியங்களை எதிர்கிறார்களா ? அது ஒன்றே போதும் அவர்களை நாங்கள் எந்த நேரத்திலும் தூக்கிக்கொண்டு போய் சிறை  வைப்பதற்கு…. என்று ஒரு அடாவடி ஆட்சியை ஒன்றிய பாரதிய ஜனதா அரசு இந்தியாவில் செய்து கொண்டிருக்கிறது. அந்த NIA என்கின்ற ஒன்றிய அரசின் இந்த புலனாய்வை, உடனடியாக கலைக்க வேண்டிய ஒன்று என்ற கோரிக்கையை இந்த கூட்டம் முன்வைக்கின்றது என தெரிவித்தார்.

Categories

Tech |