Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொள்முதல் செய்யாத காரணத்தால்…. போராட்டத்தில் ஈடுபட்ட உற்பத்தியாளர்கள்…. பரபரப்பில் கள்ளக்குறிச்சி….!!

பால்களை கொள்முதல் செய்யாததால் உற்பத்தியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தீர்த்தாபுரம் கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தின் மூலமாக அப்பகுதியில் இருக்கும் 280 உற்பத்தியாளர்களிடமிருந்து நாள்தோறும் காலை நேரத்தில் 2,000 லிட்டர் மற்றும் மாலை நேரத்தில் 1,400 லிட்டர் பால்களை கொள்முதல் செய்து வந்துள்ளனர். இதை தினமும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில் 15 நாட்களில் ஒரு நாள் மட்டும் பால்களை கொள்முதல் செய்வது இல்லை. இதனால் அன்று உற்பத்தியாளர்கள் தங்களிடம் உள்ள பாலை லிட்டர் 20 ரூபாய்க்கு வெளி நபர்களிடம் விற்பனை செய்கின்றனர்.

அப்போது வழக்கம்போல் நேற்று காலை 6 மணிக்கு 100-க்கும் அதிகமான உற்பத்தியாளர்கள் கேன்களில் 2000 லிட்டர் பாலை கூட்டுறவு சங்கத்திருற்க்கு எடுத்து வந்துள்ளனர். ஆனால் பணியில் இருந்த ஊழியர்கள் பாலை கொள்முதல் இல்லை என கூறியுள்ளனர். அதனால் கோபமடைந்த உற்பத்தியாளர்கள் கொள்முதல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பால் கேனுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நாள்தோறும் பால்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி உள்ளனர்.

இதனையடுத்து கேன்களில் இருந்த பால்களை கீழே கொட்ட முயற்சி செய்த போது அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பால் குளிரூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட உற்பத்தியாளர்கள் கேன்களில் இருந்த பாலை குளிரூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து பால் கொள்முதல் செய்ய மறுப்பு தெரிவித்ததால் அவர்களை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |