ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.12) நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிகல் – ஆரோன் ஃபிஞ்ச் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர்.
பின்னர் இறுதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 72 ரன்களை எடுத்தார்.இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு, தொடக்கத்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில் டாம் பான்டன், நிதீஷ் ராணா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில்லும் 34 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.இதனால் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியில் டிவில்லியர்ஸ் அடித்த இரண்டு சிக்சர் ரோடுக்கே சென்றது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு காரின் மீது பந்து பட்ட நிகழ்வு ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
Shot by ABD 🔥 @ABdeVilliers17#RCBvKKR pic.twitter.com/bSvZXplWlS
— Suryah (@urssuryaa) October 12, 2020