Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அரசு மேல்நிலைப்பள்ளியில்…. மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்…. உறுதியளித்த எம்.எல்.ஏ….!!

கருங்குழி மேலவளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு பாடபுத்தகங்களை வழங்கியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கருங்குழி மேலவளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து மாணவர்களின் சேர்க்கை, நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது குறித்து தலைமை ஆசிரியர்களிடம் எம்.எல்.ஏ. கேட்டறிந்துள்ளார்.

இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை கொடுத்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக தலைமையாசிரியரிடம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் உறுதியளித்துள்ளார். அப்போது ஒன்றிய செயலாளர் அப்பாத்துரை, பேரூராட்சி செயலாளர் பழனி, நிர்வாகிகள் உமாசங்கர், ரவிச்சந்திரன், விநாயகம் மற்றும் தலைமை ஆசிரியர் ஜோதி மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |