Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பல நன்மைகள் தரும் சீரகம்”… இதுவரை அறிந்திராத பயன்கள்… நீங்களே பாருங்க..!!

தினசரி உணவில் சீரகம் எடுத்துக் கொண்டால் எவ்வளவு நன்மைகள் தரும் என்பதை இதில் தெரிந்து கொள்வோம்.

நாம் உண்ணும் உணவில் சாதாரணமாகவே பல இயற்கை குணங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

கர்ப்பிணி பெண்களுக்கு:

கர்ப்பிணிபெண்களுக்கு சீரகம் தண்ணீர் கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் செரிமானத்திற்கு தேவையான நொதிகளை தூண்டும். தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும்.

செரிமான பிரச்சினைகள்:

செரிமான பிரச்சினை உள்ளவர்கள் சிறிது சீரக தண்ணீரை குடித்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சினையை நீக்கி விடும்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை:

உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்கள் சீரக தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும்.

கல்லீரல் பாதுகாப்பு:

சீரகத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. வளர்ச்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது. சீரக நீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. பித்தப்பைக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் கல்லீரல் பலம் பெறும்.

மாதவிடாய் கால வலி:

இரும்பு சத்து குறைபாட்டை சீராக தண்ணீர் சரிசெய்யும். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்கும். அந்த சமயத்தில் சீராக தண்ணீர் குடிப்பதன் மூலம் வலியை கட்டுப்படுத்தலாம். சருமம் பளபளக்கும். இதில் இருக்கும் பொட்டாசியம், மங்கனீசியம், செலினியம் ஆகியவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

முகம் பளபளக்க:

சீராக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால் முகம் பளபளக்கும். சருமம் மென்மையாக, மிருதுவாக இருக்கும். சீரகத்தில் உள்ள வைட்டமின் E சத்தானது இளமையை தக்கவைக்க உதவுகிறது. மேலும் பல வகையான சரும பிரச்சினைகளை தீர்த்து வைக்க உதவியாக இருக்கும்.

Categories

Tech |