கனடாவிலிருந்து எப்போது நற்செய்தி வரும் என்று பல குடும்பங்களும் நகையை விற்று வேலையை விட்டு காத்து கொண்டிருக்கின்றன.
பெங்களூருவைச் சேர்ந்த Aashray kovi (28) என்பவர் கனேடிய புலம்பெயர்தல் அதிகாரிகளிடமிருந்து நற்செய்தி வராதா என்று மின்னஞ்சல்களை நாளொன்றுக்கு பல முறை சோதித்துக் கொண்டே இருப்பதாக தெரிவித்துள்ளார் . மேலும் Aashray கனடாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அவருடைய confirmation of permanent residency ( COPR ) ஆவணமானது கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு முன்னதாகவே காலாவதியாகி விட்ட காரணத்தினால் மீண்டும் அந்த ஆவணத்திற்காக விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கிறார்.
அதேபோல் டெல்லியை சேர்ந்த Sameer Masih என்பவரும் அவரது குடும்பத்துடன் கனடாவிற்கு செல்வதற்காக காத்து கொண்டிருக்கிறார். மேலும் தனது குடும்பத்துடன் கனடா செல்வதற்காக 7 மாதங்களுக்கு முன்பே ஆரம்ப கட்ட அனுமதி பெற்று விட்ட நிலையில் தற்போது நகைகள் முதலான பொருட்களை விற்று வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் கனடாவில் இருந்து எப்போது நற்செய்தி செய்து வரும் என்று பல குடும்பத்தினரும் காத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.