Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பல குடும்பங்கள் நிரந்தரமாக சிதையும்- பிரதமர் மோடி வேண்டுகோள் ..!!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்ட்ட 21 நாளை பின்பற்றவில்லை என்றால் பல குடும்பங்கள் நிரந்தரமாக சிதையும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் 500கும் மேற்பட்டோரை கொடூர கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. 10 பேர் உயிரிழந்த நிலையில் இரண்டாவது முறையாக கொரோனா குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசினார். அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு என அறிவித்த பிரதமர் மோடி  வதந்திகளையும், மூட நம்பிக்கைகளையும் நம்ப வேண்டாம். அரசின் ஆலோசனைகளை மட்டும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

மருத்துவர்களின் பரிந்துரை இன்றி, எந்தவொரு மருந்தையும் எடுக்க வேண்டாம் * கவனக் குறைவாக நீங்கள் செயல்படுவது பெரிய பாதிப்பில் கொண்டு விடும். ஆனால், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க அது கட்டாயம் தேவை. உங்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் அண்டை அயலாரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.

21 நாட்கள் மிக நீண்டவை என்றாலும் அது உங்களை காக்கும். கடினமான சூழலில் இருந்து இந்தியா மீண்டு வரும் என நம்புகிறேன்21 நாளை நம்மால் சமாளிக்க முடியாது எனில் பல குடும்பங்கள் நிரந்தரமாக சிதையும். மக்கள் ஊரடங்கை காட்டிலும் இது கடுமையான ஊரடங்கு. பேரிடரில் இருந்து இந்தியா எப்படி தற்காத்துக் கொள்கிறது என்பதை காட்ட வேண்டிய தருணம் இது என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

Categories

Tech |