சூடானில் இரு தரப்பை சேர்ந்த பழங்குடியினருக்கு இடையே நடந்த மோதலில் 83 பேர் கொல்லப்பட்டதால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பழங்குடி இனங்கள் வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் பரவி காணப்படுகின்றனர். இந்த பழங்குடி இடங்களில் உள்ள மக்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் டார்பூர் மாகாணத்தின் தலைநகர் அல்ஜெனீனாவில் வசிக்கும் மசாலித் என்ற பழங்குடியினருக்கும், அராபி என்ற பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விட்டது. இந்த இரு தரப்பு பழங்குடியினரை சேர்ந்த தனிநபருக்கு இடையேயான வாக்குவாதமானது, கோஷ்டி மோதலாக மாறி விட்டது.
இந்த சண்டையில் இரு தரப்பை சேர்ந்த பழங்குடியினரையும் ஒருவரை ஒருவர் சரமாரி காக்கி கொண்டதோடு, மற்றவர்களின் வீடுகளை சூறையாடி தீ வைத்து எரித்தனர். அவர்களுக்குள் நடந்த இந்த சண்டையானது இரண்டு நாட்கள் நீடிக்கபட்டதோடு, 83 பேர் கொலை செய்யப்பட்டனர். மேலும் இதில் 160க்கும் மேற்பட்ட அதிரடி படை வீரர்கள் காயமடைந்தனர்.இதனால் அமைதியை ஏற்படுத்தும் வகையில் டார்பூர் மாகாணத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதோடு அந்த மாகாணத்தில் பொது மக்களின் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு உயர்மட்ட அதிகாரிகளை சூடான் அரசு அந்த மாகாணத்திற்கு அனுப்பியுள்ளது.