Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இதெல்லாம் விற்க கூடாது… அதிகாரிகளின் திடீர் சோதனை… வியாபாரிகளுக்கு எச்சரிக்கை…!!

கடைகளில் விற்பனை செய்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட மற்றும் காலாவதியான பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான உணவு போன்றவை விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு குழுவினர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருக்கும் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீரென சோதனை செய்துள்ளனர்.

இந்நிலையில் அதிகாரிகள் காலாவதியான குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள், அழுகிய பழங்கள், பிளாஸ்டிக் போன்ற 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். அதன் பிறகு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட விதிகளின் கீழ் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து தரமற்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்ய வேண்டாம் என அதிகாரிகள் வியாபாரிகளை எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |