Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் ஒரு மணி நேரம் மட்டும் தான்…. இதெல்லாம் கண்டிப்பா கடைபிடிக்கணும்…. தாவரவியல் பூங்காவின் கட்டுப்பாட்டுகள்…!!

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒரு மணி நேரம் மட்டுமே சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டுமே சமூக இடைவெளியை கடைபிடித்து அனுமதிக்கப்படுவர். இதனை அடுத்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படும் போது வெப்பநிலை அதிகமாக இருந்தால் அவர்கள் பூங்காக்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் ஒரு மணி நேரம் மட்டுமே சுற்றுலா பயணிகள் பூங்காவை சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில் பூங்காவிற்குள் செல்லும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், முக கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதமும், எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பூங்காவில் இருக்கும் பெரிய புல்வெளி மைதானம் மற்றும் சிறிய புல்வெளி மைதானத்தை சுற்றி கம்பிகள் வைத்து கயிறு கட்டப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து கண்ணாடி மாளிகைக்குள் ஒரே நேரத்தில் 15 பேர் மட்டும் கண்டு ரசிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

Categories

Tech |