நான் வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து இங்கு பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டன என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பேரவையில் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில அரசியலில் தற்போது உச்சக் கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்குள் குமாரசாமி அரசு தன்னுடைய ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார். இந்நிலையில் இரண்டாவது நாளாக நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதம் கர்நாடக மாநில சட்டசபையில் நடைபெற்று வருகின்றது.
இதில் பேசிய மாநில முதல்வர் குமாரசாமி கூறுகையில் , இந்த ஆட்சி அமைவதற்கு முன்பு எடியூரப்பாவுக்கு தான் முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதை நீங்கள் சரியாக பயன்படுத்தவில்லை. எல்லா வேலைகளையும் செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல எதிர்வரிசையில் அமர்ந்திருக்கிறார். நான் வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து இங்கு பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டன’ என்று குமாரசாமி தெரிவித்தார்.