Categories
உலக செய்திகள்

இந்தியாவில் தொழிற்சாலை தொடங்குவோம்..! விருப்பம் தெரிவித்துள்ள பிரபல நாட்டின் நிறுவனங்கள்… வெளியான முக்கிய தகவல்..!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் தொழிற்சாலை தொடங்க உள்ளதாக லண்டனின் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் LEVC அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் இந்தியாவில் TX எலக்ட்ரிக் கார்களை எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ் உடன் இணைந்து விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் மக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை புதிய தொழில்நுட்பம் மூலம் தயாரிக்க மத்திய அரசு நிறுவனமான சிபெட் உடன் இணைந்து polymateria நிறுவனம் புதிய முயற்சியை மேற்கொள்ள முன்வந்துள்ளது. மேலும் பிரிட்டன் இந்தியா தரப்பில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் வர்த்தகத்தை 36 பில்லியன் பவுண்டுகள் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |