Categories
தேசிய செய்திகள்

“காதல் உறவுகளால் பல இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது”…. நீதிமன்றம் கருத்து..!!

காதல் உறவு காரணமாக பல இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தால் தங்களது வாழ்க்கையை இழந்து விடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இந்திரனுக்கு எதிராக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்ய இந்த வழக்கு தடையாக இருப்பதால் இந்திரனுக்கு எதிராக வழக்கை ரத்து செய்யக்கோரி சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது தாயாரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையின்போது காணொலிக் காட்சி மூலமாக பெண்ணின் தாய் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதால் வழக்கை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டார். தனது நிர்பந்தத்தால் மட்டுமே இந்திரன் தன்னை வீட்டை விட்டு அழைத்து சென்றதாக அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிபதி அந்த வழக்கு நிலுவையில் வைத்திருப்பதால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும், அவரது தாய்க்கும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மன உளச்சல் மட்டுமே அதிகரிக்குமே தவிர வேறு எந்த பயனும் இருக்காது எனக் கூறி இந்திரனின் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

காதலுக்காக கடுமையாக சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பல இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை இழந்து விட்டு வருவதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். இதுபோன்ற வழக்குகளை கருத்தில் கொண்டு போக்சோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் யோசனை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |