தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மூலமாக 20 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இதனால் இம்மாவட்டத்தில் இரண்டாவது கட்ட தடுப்பூசி போடும் முகாம் 140 இடங்களில் நடைபெற்று வருகிறது.
இதனை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனை போல் பி. உடையூர் உள்பட இரண்டு பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் கொரோனா தடுப்பூசி முகாமையும் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போடுகிறார்களா மற்றும் முகாம்களில் அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.