தீவிரமான நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு சென்றுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முப்பத்தி ஆறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 313 நடமாடும் கொரோனா தடுப்பூசி மருத்துவ குழுக்கள், 4 அரசு மருத்துவமனைகளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த முகாம்களில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களை குலுக்கல் முறையில் 3 நபர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மூன்றாவது பரிசாக கிரைண்டரும், இரண்டாவது பரிசாக மிக்ஸியும், முதல் பரிசாக கலர் டிவியும் வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்திருக்கிறார்.
அதன்பின் இம்மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் அச்சமங்கலம் உள்பட 3 ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று கொண்டிருந்த தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது மருத்துவர்களிடம் எத்தனை நபர்களுக்கு தடுப்புச் எழுதப்பட்டிருக்கிறது மற்றும் எவ்வளவு தடுப்பூசி இருப்பு தற்போது இருக்கிறது என கேட்டறிந்துள்ளார். பின்னர் தடுப்பூசி எடுத்துக் கொள்வதன் அவசியத்தையும், அதன் நன்மைகளையும் பொதுமக்களுக்கு அறியும்படி எடுத்துக்கூற வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை அடுத்து கொரோனா முகாமின் மூலமாக 100% பொதுமக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து இம்மாவட்டம் முழுவதுமாக தற்போது நடைபெற்ற மாபெரும் தடுப்பு முகாமில் 21,158 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.