Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாரடைப்பால் உயிரிழந்த காவலர்… 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்….!!

மாரடைப்பால் உயிரிழந்த இரண்டாம் நிலை காவலரின் உடல் காவல் துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நவலை  கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ராஜசேகர். ராஜசேகர் கடந்த இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பயிற்சி முடித்த பிறகு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி என்ற பகுதியில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத தனது உறவினரை பார்ப்பதற்காக  சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காவலர் ராஜசேகர் சென்றுள்ளார் . அப்போது அவர் மருத்துவமனைக்கு வெளியே மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று  சுருண்டு கீழே விழுந்தார்.

இதனை பார்த்தவர்கள் ராஜசேகரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட காவலர் ராஜசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து அன்று இரவே ராஜசேகரின்  சொந்த ஊரான நகலை கிராமத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. மேலும் கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் உயிரிழந்த ராஜசேகரின் ஈமச்சடங்கு நிதியாக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனை  தொடர்ந்து  இன்று மதியம் ராஜசேகரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறை மரியாதையுடன்  21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Categories

Tech |