Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தலைவர் பதவிக்கு போட்டி…. வேட்பாளர் திடீர் மரணம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

வேட்பாளர் மாரடைப்பு காரணத்தினால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளூர் கருமாரியம்மன் கோவில் பகுதியில் எஸ்.எம். மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் ஊராட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

இவருக்கு சின்னமாக கை உருளை ஒதுக்கப்பட்டு அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு எதிர்பாராவிதமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பொதுமக்களிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |