Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் புடவைகள் ஏலம்…. பிரபல இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!!

“இங்கிலீஷ் விங்கிலீஷ்” படத்துக்காக நடிகை ஸ்ரீதேவி அணிந்து நடித்த புடவைகள் அனைத்தையும் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளனர்.

ஸ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உள்பட அனைத்து மொழி நடிகர்களுடன்  நடித்துள்ளார். 1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமானார். பின்னர் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அனைத்து மொழி திரைப்படங்களிலும் ஒரு காலத்தில் நடித்து  முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர்தான் நடிகை ஸ்ரீதேவி.

இவர் மரணமடைந்து நான்கு வருடங்களாக ஆன பின்பும் அவரது இழப்பை ஜீரணிக்க முடியாமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர். நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகின்றார்.  இவர் எத்தனையோ சிறந்த வெற்றி படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்த பின்னர் கடந்த 1997 ஆம் ஆண்டு சினிமாவை விட்டு விலகி குடும்ப பொறுப்பை ஏற்க போவதாக அறிவித்துள்ளார். ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு “இங்கிலீஷ் விங்கிலீஷ்” என்ற திரைப்படம் மூலம் நடிகை ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தை கவுரி ஷிண்டே டைரக்ட் செய்துள்ளார். இந்த “இங்கிலீஷ் விங்கிலீஷ்” திரைப்படம் ரிலீஸ் ஆகி பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்காக நடிகை ஸ்ரீதேவி அணிந்து நடித்த புடவைகள் அனைத்தையும் ஏலத்தில் விட முடிவு செய்திருப்பதாக இயக்குனர் கவுரி ஷிண்டே அறிவித்துள்ளார். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகையை ஏழை சிறுமிகளின் படிப்புக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |