மறைந்த ஓமன் மன்னருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி அமைதி விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்களின் சுதந்திரத்திற்காகவும் பிரிட்டிஸ் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் அரும்பாடுபட்ட தலைவர்களில் முக்கியமானவர் மகாத்மா காந்தி அவரது 125 பிறந்த நாளான 1995 ஆம் ஆண்டு இந்திய அரசு அவரது பெயரில் காந்திய அமைதி விருது வழங்குவதாக முடிவெடுத்து ஒவ்வொரு ஆண்டும் இதை தவறாமல் வழங்கியதுள்ளது . அந்தவகையில் இந்திய பிரதமர் நரேந்தி மோடி இந்திய தலைமை நீதிபதி மற்றும் பாராளுமன்ற எதிர் கட்சித் தலைவர்கள் போன்றவர்கள் கொண்ட குழுவின் மூலம் இந்த விருது தேர்வு செய்யப்படுகிறது.
அதன்படி இந்த குழு கடந்த 19ஆம் தேதி கூடியுள்ளது. இந்நிலையில் ஓமன் நாட்டு மன்னர் அந்நாட்டை காந்திய வழியில் சமூக பொருளாதாரம் அரசியல் போன்றவைகளில் தனது சிறந்த மேம்பாட்டை கொடுத்துள்ளது. மேலும் தனது வளர்ச்சி திட்டங்கள் மூலம் ஓமன் நாட்டை சிறந்த பாதையில் கொண்டு சென்றிருக்கிறார். ஏதேனும் நாடுகளுக்கிடையில் பிரச்சனை ஏற்பட்டால் அதனை காந்தியைப் போன்ற அமைதியான முறையில் கையாண்டு வருகிறார்.
இதனைத் தொடர்ந்து இவர் இந்தியாவில் கல்வி பயின்றவர் என்றும் சங்கர் தயாள் சர்மா என்ற இந்திய முன்னாள் ஜனாதிபதியின் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் ஓமன் நாட்டுக்கு இடையேயான நட்புறவு நல்ல முறையில் தொடர்ந்து வருவதற்கு சிற்பியாக செயல்பட்டு வருவதால் நாடுகளின் உறவு புது உச்சத்தை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சிறப்புமிக்க மறைந்த ஓமன் நாட்டு மன்னர் காபூஸ் பின் சேட் அல் சேட்டுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டிற்க்கான காந்திய அமைதி விருதை அவருக்கு வழங்க அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர்.1 கோடி ரூபாய் பணம் பதக்கம் சான்றிதழ் மற்றும் தறியில் நெய்த துணிகள் என அனைத்தும் இந்த விருதில் கொடுக்கப்படுவதாக இந்திய அரசின் பத்திரிக்கைத் துறை அறிவித்துள்ளது.