Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்… பல லட்ச ரூபாய் நஷ்டம்… தீயணைப்புதுறையினரின் தீவிர முயற்சி…!!

மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் அபுதாகீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மரக்கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடை அருகே கொட்டப்பட்டிருந்த குப்பையில் தீ எரிந்துகொண்டிருந்தது. இதனையடுத்து அங்கு எரிந்து கொண்டிருந்த தீ அபுதாகீர் கடையில் வைக்கப்பட்டுள்ள பழைய மரப்பொருட்கள், மரச்சாமான்கள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் மீதும் பரவியது.  இதனால் கடை முழுவதும் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதுகுறித்து அபுதாகீர் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கடையில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அந்த கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |