Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலை தடுமாறியதால்… காய்கறி வியாபாரிக்கு நடந்த சோகம்… சகோதரரின் பரபரப்பு புகார்…!!

மரத்தின் மீது சரக்கு வேன் மோதியதில் காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி தெற்கு தோப்பு பகுதியில் அஷ்ரப் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஹ்மத்துல்லா என்ற தம்பி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் சரக்கு வேனில் மதுரை பரவை மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டு தொண்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து தொண்டி பகுதியில் வசிக்கும் மணீஸ் குமார் என்பவர் சரக்கு வேனை ஓட்டி கொண்டும், ரஹ்மத்துல்லா அவருக்கு இடது புறம் உட்கார்ந்தும் வந்து கொண்டிருந்தனர்.

இதனைதொடர்ந்து வேறு வாகனத்தில் அஸ்ரப் அலி அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளார். அப்போது பூவந்தி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சரக்கு வேன் சென்று கொண்டிருந்தபோது இடது புறத்தில் இருந்த புளியமரத்தில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பலத்த காயமடைந்த ரஹ்மத்துல்லா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஷ்ரப் அலி பூவந்தி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் சரக்கு வேன் ஓட்டிச்சென்ற மணிஸ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |