கிருஷ்ணகிரி மாவட்டம் ஆஞ்செட்டி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரை மரக் கடத்தல் கும்பல் ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஞ்செட்டி மற்றும் உரிகம் வன பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடபடுவதும் , உயர் ரக மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ஆஞ்செட்டி வன சரகத்திற்கு உட்பட்ட வன பகுதிகளில் வனத்துறையினர், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அட்டப்பள்ளம் பகுதியில் விலை உயர்ந்த மரங்களை, 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொண்டு இருந்ததைக் கண்ட வனத் துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர்.
ஆனால் அவர்களால்ஆயுதங்களால் வனத்துறையினரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் வனக் காப்பாளர்கள் ராமமூர்த்தி, சக்திவேல் உள்ளிட் ட 5 பேர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.