Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஏதோ மர்மம் இருக்கு…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

மர்மமான முறையில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சி.ஏ. பட்டதாரியான ரஞ்சித்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமாக அடுத்தடுத்து இரண்டு வீடுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் ரஞ்சித்குமார் மற்றொரு வீட்டில் தூங்குவதற்காக  சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் ரஞ்சித்குமார் எழுந்து வராததால் அவரின் பெற்றோர் பதற்றம் அடைந்துள்ளனர்.

அதன்பின்னர் ரஞ்சித்குமாரின் பெற்றோர் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து ரஞ்சித்குமாரின் பெற்றோர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரஞ்சித்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரஞ்சித்குமாரின் மர்மமான இறப்பு பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |