திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மணச்சநல்லூர் அருகே உள்ள சிலயாத்தி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள வேம்பு, ஊதியம் போன்ற மரங்களைக் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆட்களை வைத்து வெட்டி லாரியில் ஏற்றி உள்ளார். லாரி சாலையில் பள்ளத்தில் மாட்டி இருப்பதால் அவ்வழியாகச் சென்ற பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.
தகவலறிந்து சம்பவ பகுதிக்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கிருஷ்ணமூர்த்தி லாரி ஓட்டுனர் மோகன்ராஜ் பொக்லைன் ஓட்டுனர் மாரியப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.