Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்…. பொதுமக்களின் தகவல்…. தீயணைப்புத் துறையினரின் தீவிர முட்யற்சி….!!

மரப்பட்டறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை மார்க்கெட் மனகாவலம்பிள்ளை மருத்துவமனை அருகில் ஒரு மரக்கடையை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். அங்கு அவர் மரத்தினாலான கதவு, ஜன்னல்கள் செய்யும் பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில் மணியும் அதே கடையில் வேலை பார்த்த தொழிலாளர்களும் கடையை மூடி விட்டு சென்று விட்டனர். இதனையடுத்து காலையில் அவரது கடையில் இருந்து புகை வந்துள்ளது. மேலும் சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கூடுதலாக தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதனையடுத்து தீயணைப்பு அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டார். அந்த தீ விபத்தில் கடையில் உள்ள மரம் அறுக்கும் மற்றும் போலிஷ் செய்யும் எந்திரங்கள், தேக்கு மரக்கட்டைகள் என பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து மணி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |