மராட்டியத்தின் உயர்ந்த விருது பழம்பெரும் பின்னணிப் பாடகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் சாதனையாளர்களுக்கு ஆண்டு தோறும் மராட்டிய பூஷன் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1990ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருது விழா இன்று வரை வெகு விமர்சையாக நடந்து வருகிறது. விருதுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான மராட்டிய பூஷன் விருது புகழ்பெற்ற பின்னணி பாடகியான ஆஷா போஸ்லேவுக்கு வழங்கப்பட உள்ளது. ஆஷா போஸ்லே 1944ஆம் ஆண்டு தனது முதல் பாடலை மராத்தி படத்தில் பாடியிருந்தார். அதன் பின் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
இவர் இரண்டு தேசிய விருதுகள், 8 பிலிம்பேர் விருதுகள் மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில் இவருக்கு மராட்டியத்தின் உயரிய விருதான மராட்டிய பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.