மராட்டியத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தகவல் வெளியிட்டுள்ளார்.
உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. மராட்டிய மாநிலத்தில் 2-வது அலையாக வீசப்படும் கொரோனா பரவலால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மே மாத இறுதியில் நோய் பரவல் குறையும் என்றும் அதன்பின் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 3-வது அலையின் தாக்கம் அதிக அளவில் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் போபே அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதனால் மருத்துவ ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க மராட்டியம் முயற்சி செய்து வருகின்றது. இதற்கு முன்னதாகவே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் உள்பட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.அப்போது அந்தக் கூட்டத்தில் இவர் 3-வது கொரோனா நோய் பரவல் அலையை தடுக்க தடுப்பூசி போட்டு முடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் மூன்றாவது அலை கொரோனா உருவெடுத்து வருவதால் இதனை எதிர்கொள்ள புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்கவும், மருந்துகளை போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்ளவும், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக பொதுமக்கள் கொரோனா விழிப்புணர்வுடன் கட்டுப்பாடுகளை மதித்து முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவின் பரவலை குறைக்கும் முடியும் என்றும் கூறியுள்ளார்.