Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

”பள்ளியில் மராத்தி மொழி கட்டாயம்” அசத்திய சிவசேனா அரசு ….!!

மகாராஷ்டிரா பள்ளியில் மராத்தி மொழி கட்டாயம் என்ற மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட்து.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகின்றது. மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே இருக்கின்றார். புதிய கூட்டனி அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மக்கள் நல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அண்மையில் கொண்டு வந்த மலிவு விலை உணவகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மாநில உரிமையை பாதுகாக்கும் வகையில் , மாநில மொழியை பாதுகாக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்படுள்ளது. அங்குள்ள பள்ளிகள் மராத்தி மொழி கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பதற்கான சட்ட மசோதா மகராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |