விபத்தில் படுகாயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி நயனார் குத்தகை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார் .இவருக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது .இந்நிலையில் சம்பவ தினத்தன்று நெய்விளக்கு கடைத் தெருவிலிருந்து இருசக்கர வாகனத்தில் அண்டர்காட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் சுரேஷ் படுகாயமடைந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் .இதன்பிறகு மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார் .இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டரான பத்மசேகர் ஆகியோர் விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.