மரத்தில் பாய்ந்த மின்னலின் அதிர்வினால் தொழுவம் விழுந்து பசுமாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது துறைமங்கலம் காட்டு பகுதியில் உள்ள ஒரு வாகை மரத்தின் மீது மின்னல் தாக்கி அந்த அதிர்வில் அருகில் உள்ள மாட்டுத்தொழுவம் சரிந்து விழுந்தது.
இதனால் அங்கு கட்டப்பட்டிருந்த துறைமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன்குமார் என்பவரின் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்து விட்டது. மேலும் சூறாவளியுடன் கூடிய இந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது.