மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூழையன் விடுதியில் ராமையா என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடுகளை மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராமையா தனது வீட்டின் மரத்தின் மீது இலைகளை பறிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது ராமையா எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதனையடுத்து பலத்த காயமடைந்த ராமையாவை அருகிலுள்ளவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமையா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த செம்பட்டி விடுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.