கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காஞ்சி கிராமத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அரக்கோணத்திலிருந்து டி.வி-கான உதிரி பாகங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு சோளிங்கர் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.
இதில் ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஓட்டுநரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.