சத்தீஸ்கரில் அம்பேத்கர் மருத்துவமனை கல்லூரியில் திங்கட்கிழமையன்று காத்திருப்பு அறையில் படுத்து உறங்கிய நபர் அங்கிருந்த கூலரை ஆன் செய்து தூங்கி உள்ளார். காலை அங்கு வந்த பெண் ஒருவர் கூலரை ஆப் செய்துள்ளார். ஏன் ஆப் செய்தீர்கள் என அந்த நபர் கேட்டதற்கு, உடனே அந்தப் பெண் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்திருந்த நபரை செருப்பால் பலமுறை அடித்ததுடன் காலால் எட்டி உதைத்துள்ளார். இதற்கிடையில் அங்கு நின்ற நபர் ஒருவர் அந்த நபரை குச்சியால் குத்துகிறார்.
இதனை அறிந்து அங்கு வந்த பாதுகாப்பு பணியாளர்கள் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்துகின்றனர். ஆனால் தாக்கப்பட்ட நபர் அந்த பெண்ணுக்கு எந்த பதிலடியும் தரவில்லை, அமைதியாக தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து செல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி பலரின் கவனத்தை திருப்பி இருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்திய மருத்துவமனை நிர்வாகம், அந்த நபர் ஆதரவற்றவர் என்றும் தூங்குவதற்கு இடம் தேடி மருத்துவமனைக்குள் வந்த அவர், கூலரை ஆன் செய்துள்ளனர். தேவையற்ற நபர்கள் உள்ளே நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
छतीसगढ़ के अंबिकापुर मेडिकल कॉलेज के OPD में एक महिला ने युवक की पिटाई कर दी. बताया जा रहा है कि महिला ने ये सिर्फ़ इसलिए किया क्योंकि हॉल में चल रहे कुलर को महिला ने बंद कर दिया था. इस व्यक्ति ने महिला से कूलर बंद करने का कारण पूछा लिया. pic.twitter.com/BrZ2xvL4Sa
— Priya singh (@priyarajputlive) October 19, 2022