Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஒரே நாளில் 294 போலீசாருக்கு கொரோனா….3 பேர் கொரோனாவிற்கு பலி…!!!

மராட்டியத்தில் ஒரே நாளில் மட்டும் 294 காவல்துறையினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 போலீசார் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் காவல்துறையினர் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 294 காவல் துறையினர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 392 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 3 போலீசார் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அதனால் உயிரிழந்த போலீசாரின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுள் 11 போலீஸ் அதிகாரிகளும் அடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட போலீசாரில் 9 ஆயிரத்து 187 பேர் குணமடைந்து வீடு திரும்பிஇருக்கின்றனர். மேலும்  2 ஆயிரத்து 84 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போன்று ஊரடங்கு காலகட்டத்தில் நடந்த 332 தாக்குதல் சம்பவங்களில் 89 போலீசார், 66 சுகாதாரத்துறை ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த வழக்குகளில் 888 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 தற்போது வரை மாநில போலீசார் ஊரடங்கு அத்துமீறல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ரூ.20 கோடி வரை அபராதம் வசூலித்து  இருக்கின்றனர்.

Categories

Tech |