Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நான் இதான் பயன்படுத்துறேன்” மொத்தம் 5 அடி நீளம்… ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

சுமார் 5 அடி நீளம் வளர்ந்த மரவள்ளிக்கிழங்கை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதுவெள்ளியம்பாளையம் பகுதியில் தியாகராஜன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் அந்த தோட்டத்தில் இருக்கும் மரவள்ளி கிழங்குகளை தோண்டும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஒரு செடியின் வேரில் இருந்த மரவள்ளிக்கிழங்கு மிக நீளமாக வளர்ந்திருப்பதை கண்டு வியப்படைந்தனர். அதன் பின் சுமார் 5 அடி உயரம் வரை நீண்டு வளர்ந்த மரவள்ளிக் கிழங்கை தொழிலாளர்கள் தோண்டி எடுத்தனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும் போது, சாதாரணமாக மரவள்ளிக்கிழங்கு 2 அல்லது 3 அடி நீளம் வரை இருக்கும் எனவும், இங்கு வளர்ந்திருக்கும் 5 அடி நீளமுடைய மரவள்ளிக்கிழங்கை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர். அதன் பின் தியாகராஜன் கூறும் போது தனது தோட்டத்தில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் 5 அடி நீளமுள்ள மரவள்ளிக்கிழங்கை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Categories

Tech |