Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 14….!!

இன்றைய தினம் : 2019 மார்ச் 14

கிரிகோரியன் ஆண்டு : 73ஆம் நாளாகும்.

ஆண்டு முடிவிற்கு  : 292 நாட்கள் உள்ளன

 

இன்றைய தின நிகழ்வுகள்:

1489 – சைப்பிரஸ் மகாராணி கத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிஸ் நகருக்குக் விற்றார்.

1647 – முப்பதாண்டுப் போர்: பவேரியா, கோல்ன், பிரான்சு, சுவீடன் ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

1794 – அமெரிக்கர் எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் பருத்தி அரவை ஆலைக்கான காப்புரிமம் பெற்றார்.

1898 – மருத்துவர் வில்லியம் கேப்ரியல் ரொக்வூட் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

1926 – கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் இருந்து வீழ்ந்ததில் 248 பேர் உயிரிழந்தனர், 93 பேர் காயமடைந்தனர்.

1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது.

1939 – சிலோவாக்கியா செருமனியின் அழுத்தத்தில் விடுதலையை அறிவித்தது.

1951 – கொரியப் போர்: இரண்டாவது முறையாக ஐ.நா படைகள் சியோல் நகரைக் கைப்பற்றியது.

1978 – இசுரேலியப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பற்றியது.

1979 – சீனாவில் பெய்ஜிங் நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 44 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.

1980 – போலந்தில் வானூர்தி ஒன்று வார்சாவாவுக்கு அருகில் வீழ்ந்ததில், 14 அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 87 பேர் கொல்லப்பட்டனர்.

1994 – லினக்சு கருனி 1.0.0 வெளியிடப்பட்டது.

1995 – உருசிய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்க விண்ணோடி ஒருவர் (நோர்மன் தகார்ட்) முதன் முதலாகப் பயணித்தார்.

1998 – தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.

2006 – சாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.

இன்றைய தின பிறப்புகள்:

1835 – ஜியோவன்னி ஸ்கையாபரெலி, இத்தாலிய வானியலாளர், வரலாற்றாளர் (இ. 1910)

1837 – யாப் ஆ லோய், நவீன கோலாலம்பூரை நிறுவியவர் (இ. 1885)

1879 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர், கல்வியாளர் (இ. 1955)

1895 – குருமுக் நிகால் சிங், இந்திய அரசியல்வாதி

1908 – சி. எக்ஸ். மார்ட்டின், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

1918 – கே. வி. மகாதேவன், தென்னிந்திய இசையமைப்பாளர் (இ. 2001),

1958 – இரண்டாம் ஆல்பர்ட், மொனாக்கோ இளவரசர்

1960 – எய்தி ஏம்மல், அமெரிக்க வானியலாளர்

1965 – அமீர் கான், இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்

1972 – ஐரோம் சர்மிளா, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர்

1974 – சாதனா சர்கம், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி

1986 – ஜேமி பெல், ஆங்கிலேய நடிகர்

இன்றைய தின இறப்புகள்:

1883 – காரல் மார்க்சு, செருமானிய மெய்யியலாளர் (பி. 1818)

1932 – ஜார்ஜ் ஈஸ்ட்மன், ஈஸ்ட்மேன் கோடாக்கைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1854)

1955 – மனோகர் பாரிக்கர், இந்திய அரசியல்வாதி, கோவா மாநில முதலமைச்சர்

1973 – அவார்டு அயிக்கன், அமெரிக்க கணினி அறிவியலாளர் (பி. 1900)

1995 – வில்லியம் ஆல்பிரெட் பவுலர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1911)

2007 – இசுடெல்லா செஸ், அமெரிக்க குழந்தைகள் மனநோய் மருத்துவர் (பி. 1914)

2010 – விந்தா கரண்டிகர், மராத்தி எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1918)

2018 – ஸ்டீபன் ஹோக்கிங், ஆங்கிலேய வானியற்பியலாளர், நூலாசிரியர் (பி. 1942)

2018 – வசந்தா வைத்தியநாதன், ஈழத்து ஆன்மிக சொற்பொழிவாளர், நூலாசிரியர்

இன்றைய தின சிறப்பு நாள்:

மாவீரர் நாள் (செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்)

தாய்மொழி நாள் (எசுத்தோனியா)

பை நாள்

Categories

Tech |